ஒரு வருடத்தைத் தின்று செரித்த நாட்களில் என்ன செய்திருக்கிறேன் என கொஞ்சம் திரும்பி பார்க்க வைத்தது வருடத்தின் கடைசி தினக் குறிப்பேடு. அது தந்திருக்கும் மதிப்பீடுகள் ---------------------------------------------------------------------------------------------------------------------.
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் - என்ற வள்ளுவ வாக்கிற்கேற்ப பிள்ளைகள் சார்ந்து அதிகம் செலவிட்டிருக்கிறேன். மகனின் ஓவியங்களை பத்திரிக்கைகளுக்கு அனுப்புதல், அவர்களின் பள்ளிக்கூட புராஜெக்ட் வேலைகள், போட்டிகளுக்குத் தயார் செய்து அனுப்புதல் என வருடம் முழுக்க பெரும்பகுதி நேரங்கள் அவர்களுக்காகவே போயிருந்திருக்கிறது.
அச்சில் – அந்தமான் செல்லுலார் சிறை ஒரு வரலாறு – நூல் (நன்றி பாரதி புத்தகாலயம்), இரண்டு சிறுகதைகள் (நன்றி – சிங்கப்பூர் தமிழ்முரசு, வாதினி தீபாவளி மலர்), நான்கு கட்டுரைகள் ( நன்றி – உங்கள்நூலகம் மாத இதழ், தினமணி – சிறுவர் மணி இதழ்)
இணையத்தில் – ஒரு நூல் விமர்சனம் (நன்றி - பதாகை மின்னிதழ்) வந்திருக்கிறது.
பதிப்பாளர்கள் என் மேல் வைத்துள்ள நம்பிக்கையில் நான்கு நூல்களை அனுப்பி வைத்திருக்கிறேன். முடிவுகளுக்காக அவைகளைப் போலவே நானும் காத்திருக்கிறேன்.
இந்த வருட மதிப்பீடுகள் அத்தனை உவப்பாய் இல்லை! இனித் தொடங்கப் போகும் வருடத்திலாவது ஏதேனும் உருப்படியாய் செய்ய வேண்டும்.
அனைவருக்கும் 2020’ புத்தாண்டு வாழ்த்துகள்.
அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்...
ReplyDelete