அதீதப் புனைவு, மிகையதார்த்தப் புனைவு, ஜால யதார்த்தப் புனைவு போன்ற யுத்திகளில் சிக்கித் திணறாமல் தான் அறிந்த வாழ்வை எதிர்கொண்ட யதார்த்தத்திலிருந்து கவிதையாகச் செதுக்கிச் செல்கிறார் கவிஞர் மு.கோபி சரபோஜி. சமூகத்தைச் சதா கண்காணிப்பது, குடும்பச் சிக்கல்களை எடுக்க முனைவது, பெண்மையைக் கொண்டாடுவது, தத்துவ கவித்துவச் சரடினூடே கொஞ்சம் பிரச்சாரம் செய்வது, கொஞ்சம் வசந்தம் பூசுவது, வாழ்வை ரசிக்கச் சொல்வது என எல்லாமுமாகியிருக்கும் கோபி சரபோஜி இலக்கிய வெளியில் தன் பயணத்தை வெற்றிகரமாய் துவங்குவதற்கான சாட்சியங்களோடு இருக்கிறார்.
அமிர்தம் சூர்யா
தலைமை துணை ஆசிரியர் -கல்கி வார இதழ்