சில வரலாற்று நூல்கள் நாட்டுடைமையாக்கப் பட்டவுடன் காத்திருக்கும்
பருந்துகளாய் பதிப்பகங்கள் அத்தகைய புத்தகங்களை அச்சடித்துத் தள்ளுகின்றன.
அவற்றின் விற்பனையும் சோடை போவதில்லை. இதன்
பொருள் அப்படியான நூல்கள் அதிகம் வாசிக்கப்படுகின்றன. இதன் மூலம் நூற்றாண்டுக்கு முந்தைய
தன் இனத்தின், மண்ணின் நிலைமையை இந்தத் தலைமுறை அறிந்து கொள்ள முனைகிறது என்று சந்தோசம்
கொள்ளலாம். அந்த வகையில் பேராசிரியர் ந. சஞ்சீவி அவர்களின் நூல்கள் பெருமளவில் மலிவுப் பதிப்புகளாக வர ஆரம்பித்திருக்கின்றன.
வரலாற்றை மீளாய்வு செய்பவர்களுக்கும் ஆய்வுக் கட்டுரையாளர்களுக்கும் இவருடைய நூல்கள் ஆதாரங்களாக அமைகின்றன.
