Sunday, 13 November 2016

உந்துதல் தந்த உபதேசங்கள் - 6

அடுத்து என்ன செய்யப் போகிறாய்? என்பதற்கான பதில் உன்னிடம் இல்லாது போனதற்காக வருத்தப் படாதே. எதுவும் செய்யாமல் இருக்கப் போவதில்லை என்பதில் திடமாய் இரு. அது போதும்.

நேரத்தின் அருமை தெரியாதவனிடம் வழிகாட்டலைப் பெறக் காத்திருப்பதற்குப் பதி்லாக அதை வேறு வழிகளில் பெறுவதற்கு முயற்சி செய்.

உண்மையற்ற ஒன்றை வெகு இயல்பாய் சொல்ல ஆரம்பிப்பவனிடம் கவனமாய் இரு. அவனுடைய தந்திரங்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உன்னையவும் கூர் பார்க்கக் கூடும்.

Friday, 11 November 2016

படிப்பில் இருந்து வாசிப்பிற்கு

ஆங்கிலத்தில் ரீடிங் (READING) என்ற ஒரு சொல்லைத் தமிழில் பயன்பாட்டு நோக்கில்படித்தல்”, ”வாசித்தல்என்ற இரு சொற்களாகப் பயன்படுத்துகிறோம். இவ்விரு சொற்களும் மிக நுட்பமான வேறுபாடுகளைத் தனக்குள் பொதிந்து வைத்திருக்கின்றது. இதை உணராமலே பயன்படுத்திக் கொண்டிருக்கும் அதேநேரம் இவ்விரண்டிற்குமான வித்தியாசத்தை அறிவது வாசிப்பு நிலையில் இருப்பவர்களுக்கு  மிகவும் அவசியம்.  

படிப்பதை எல்லோராலும் எந்த மெனக்கெடலுமின்றி செய்து விட முடியும். அதற்கு இருப்பதை அப்படியே ஏற்றுச் செல்வதற்குரிய அளவில் மொழி அறிவு இருந்தால் போதும். படிக்கும் போது அதில் முரண் கொள்ள, வாதிட எந்த வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் இல்லை, அப்படியே இருந்தாலும் அதைச் செய்ய முடியாது. பாடப்புத்தகங்கள், “எப்படிஎன்ற வழிகாட்டல்களைத் தரும் புத்தகங்கள் உள்ளிட்டவைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், ஒரு படைப்பிலக்கியத்தை பாடப்புத்தகங்கள், பாட்டுப் புத்தகங்களை படிப்பதைப் போல அணுக முடியாது, காரணம் அது வாசகனுக்குக் கட்டற்ற சுதந்திரத்தைக் கொடுக்கிறது. தன் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறது. அதனால் தான்  ஒரு படைப்பை அப்படியே ஏற்று ஒரு வாசகன் கொண்டாடும் போது இன்னொரு வாசகனுக்கு அது முரணாக எழுந்து நிற்கிறது.

Wednesday, 3 August 2016

பாராட்டின் பலம்!

                            

ஊக்குவிப்பவன் இருந்தால்

ஊக்கு விற்பவனும்

தேக்கு விற்பான்என்பது மறைந்த கவிஞர் வாலியின் வரி. இப்படியான ஊக்குவித்தல் எத்தனை பேருக்குக் கிடைக்கிறது. மற்றவர்களை விடுங்கள். பெற்றோரிடமிருந்து அவர்களின் குழந்தைகளுக்கு கிடைக்கிறதா? என்றால் இல்லை என்பது தான் பெரும்பாலான பிள்ளைகளின் பதிலாக இருக்கிறது. முதல் தேர்வில் நாற்பது மதிப்பெண்கள் வாங்கிய குழந்தை அடுத்த தேர்வில் அறுபது மதிப்பெண்கள் வாங்கி வந்து ஆர்வத்துடன் சொல்லும் போது, “அடடே…… இப்ப உன்னால் இவ்வளவு எடுக்க முடியுதுன்னா இன்னும் நல்லா படிச்சா உன்னால இதைவிடவும் கூடுதல் மதிப்பெண் வாங்க முடியும்னு நினைக்கிறேன்என ஒரு பாராட்டை உற்சாகமாக எத்தனை பெற்றோர்கள் கொடுக்கிறார்கள். இப்படி கொடுப்பதற்கு பதிலாகஅறுபதெல்லாம் ஒரு மார்க்கா? ஒழுங்கா படிச்சு இன்னும் நல்ல மார்க் வாங்கப் பாருஎன கடிந்து கொள்வதோடு பக்கத்து வீட்டில் அவனோடு படிக்கும் பையனையும் ஒப்பீட்டுக்காக துணைக்கு வைத்துக் கொள்வார்கள். அப்புறம் எப்படி அந்த குழந்தைக்கு அறுபதைக் கடந்து விட வேண்டும் என்ற வேகம் வரும்? வேதனை தான் வரும்!

Monday, 1 August 2016

தேவதைகளின் அட்டகாசம் - 10

பழத்தோட்டம்அல்லதுபோர்க்களம்இந்தத் தலைப்பில் சின்னதா ஒரு கவிதை சொல்லுங்க, தமிழ் ஒர்க்ஷீட்டுக்கு வேணும்.

போர்க்களம்தலைப்புக்குச் சொல்கிறேன்.

சரி.

தர்மமும்

அதர்மமும்

சந்திக்கும் முனையம்!

சந்திக்கும் முனையம்” -  அப்படின்னா இங்கிலீஷ்ல சொல்லுங்க.

MEETING POINT.

.கே. குட். தேங்ஸ் டாடி