Friday, 16 June 2017

பகிர்ந்து செய்யுங்கள்


இலக்கு, திட்டமிடல் ஆகியவைகளில் நம்மில் பலருக்கும் இருக்கும் தெளிவு அது சார்ந்த செயல்களைச் செய்யும் போது இருப்பதில்லை. ஒரு வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்பதே இன்று பலருக்கும் தெரிவதில்லை. வேலையை முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது. அதை எப்படிச் செய்தால் முடிக்க முடியும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும். இந்தத் தெளிதலும், தெரிதலும் இருந்தால் போதும் வெற்றியை உங்கள் பக்கம் சாய்த்து விட முடியும், அதற்கு உங்களுடைய வேலைகளைப் பகிர்ந்து செய்ய வேண்டியது அவசியம்.  

Tuesday, 13 June 2017

பயணத்தை எளிமைப்படுத்துங்கள்

பூங்கா ஒன்றில் நடந்து கொண்டிருந்த டால்ஸ்டாய் எதிரில் வந்தவரைப் பார்த்து ஹலோ, எப்படி இருக்கிறீர்கள்? என்று விசாரித்தார். அவரோ நான் உங்களை இதுவரை சந்தித்ததே இல்லை. அப்படியிருக்க என்னிடம் என்ன விசாரிப்பு வேண்டிக் கிடக்கு? என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். மறுநாளும் அந்தப் பூங்காவிற்கு வந்த டால்ஸ்டாய் அதே நபரைச் சந்தித்ததும்நேற்று நாம் இருவரும் சந்தித்துக் கொண்டோம். அதனால் இன்று என்னைத் தெரியாது எனச் சொல்லி விடாதீர்கள். நலமா?” என்று கேட்டாராம். டால்ஸ்டாயாது அவருக்கு முன், பின் அறிமுகமில்லாத நபரைச் சந்தித்தார். ஆனால் நாம் நம்மை நன்கு அறிந்தவர்களிடமும், நம்மோடு இருக்கும் சக ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்களிடமும் கூட இப்படியான மனநிலையில் தான் பழகுகிறோம். புறக்கணிப்புகளின் வழி முன்னேறிச் செல்ல நினைக்கிறோம். ”எல்லா நோய்களுக்கும் மருந்து உண்டு. ஆனால் புறக்கணிப்பு என்ற நோய்க்கு மட்டும் மருந்தே கிடையாது. எனவே யாரையும் அலட்சியப்படுத்தாதீர்கள்என்கிறார் இங்கர்சால்