விடுமுறை முடிந்து பள்ளிக்குத் திரும்பிய மகள் விடுமுறையில் செய்து வர வேண்டும் என பள்ளியில் சொல்லி அனுப்பி இருந்த "அசைன்மெண்ட்" களை செய்து முடித்து கத்தை கத்தையாக அடுக்கி வைத்திருந்தாள்.
"லீவுக்கு தந்த எல்லா அசைன்மெண்ட்டையும் முடிச்சிட்டேன் டாடி. இந்தி மட்டும் படிக்க முடியல. ஜி திட்டுவாங்க" என வருத்தத்தோடு சொல்லிக் கொண்டிருந்தாள்.
லீவுன்னா படிக்கனுமா? ஜி கேட்டா ஊருக்கு போயிருந்தேன்னு சொல்லு" எனச் சொல்லி அனுப்பி இருந்தேன்.
"பள்ளியில் இருந்து திரும்பியவளிடம் முதல் நாள் வகுப்பு எப்படி? அசைன்மெண்டெல்லாம் ஓ.கே.யா? "என்றேன்.




