Thursday, 20 December 2018
வாழ்க்கையை போதிக்கும் வழிபாடு
Thursday, 6 December 2018
Wednesday, 28 November 2018
அதிகாலை சுகம்....
மெல்ல பொழுது புலர்ந்த நேரத்தில் அதிகாலை தூக்கத்தை இரசித்த படி படுக்கையில் கிடந்த மகனும், மகளும் மணநாள் வாழ்த்துகளை தந்தார்கள். அதன்பின் எனக்கும், மனைவிக்கும் கைகள் நிரம்ப பரிசுப் பொதியைத் தந்தார்கள்.
"நாங்களா ஐடியா பண்ணி வாங்கி பேக் செஞ்சோம். உங்களுக்கு யூஸ் ஆகுமான்னு தெரியல" என்றார்கள்.
"பரிசுப் பொருட்களை விட உங்கள் வாழ்த்துகள் தான் சந்தோசம்" என்றேன்.
ஆளுக்கொரு முத்தத்தை அன்பாய் தந்தவர்கள் பள்ளிக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள்.
Thursday, 12 July 2018
வாழ்க்கையை போதிக்கும் வழிபாடு!
ஒரு மனிதன் மிகுந்த துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆட்பட்டு கஷ்ட்டப்படுவதைக் கண்டு, “எப்ப செஞ்ச பாவமோ இப்பக் கெடந்து அனுபவிக்கிறான்” என்போம். அதேபோல, ஞானிகள், யோகிகள், முனிவர்கள் தவநிலையில் இருப்பதைக் கண்டு “இனி ஒரு பிறவி வேண்டாம் என இறைவனை வேண்டி தவமிருக்கிறான்” என்போம். மனிதர்களாகப் பிறந்த நாம் ஏன் பிறந்தோம்? இந்தப் பிறவிக்கு முன் எப்படி இருந்தோம்? இந்தப் பிறவிக்குப் பின் எப்படி இருப்போம்? என்ற கேள்விகளுக்கான பதிலில் ஒருவருக்கொருவர் முரண்பட்டு நின்றாலும் ஆத்மாவானது பல நிலைகளில் பிறவி எடுக்கிறது என்பதில் ஒத்த கருத்துடன் தான் இருக்கிறோம்.



