நான் தேர்வில் பாஸ் ஆக வேண்டும். நான் முதல் ரேங்க் எடுக்க வேண்டும். எனக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும். எனக்கு நல்ல கணவர் மட்டுமல்ல என் பேச்சைக் கேட்கின்ற மாமியாரும், நாத்தனாரும் வேண்டும்; எனக்குக் குழந்தை வேண்டும் அதுவும் ஆண்குழந்தை என்றால் நிரம்ப சந்தோசம் என தொடர் கதையாய் நீளும் இவையெல்லாம் ஆத்ம சுத்திக்காக ஆலயம் வரும் நாம் சுயநலத்தோடு இறைவனிடம் கேட்கும் சங்கதிகள்! ஆலயத்திற்கு வெளியில் அமர்ந்து கொண்டு நம்மிடம் தனக்காக உதவி கேட்பவர்களை “பிச்சைக் காரர்கள்” என ஏளனம் செய்கின்றோம். அதே காரியத்தை ஆலயத்திற்குள் இருந்து கொண்டு செய்யும் நம்மை எப்படி அழைத்து ஏளனம் செய்து கொள்வது?
Thursday, 24 January 2019
Sunday, 30 December 2018
பரம் பொருளை நெருங்க பற்றற்றிரு !
வழிபாட்டின் உன்னதங்களை உணராமல் வெறுமனே ஆலய வழிபாட்டில் கலந்து கொள்வதிலும், வழிபாட்டின் வழிமுறைகளை இம்மி பிசகாமல் பின்பற்றுவதிலும் ஒரு பயனும் இல்லை. இவைகளை உணர்ந்தால் மட்டுமே உயர்பேற்றை அடைய முடியும் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். இதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதாலயே அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, நைவேத்தியம், ஆராதனை என்ற ஐந்து வகை உபச்சாரங்களுடன் ஆலயங்களில் இறைவனுக்கு ஆறுகால பூஜை நடத்தப்படுகிறது.
Saturday, 29 December 2018
அர்ச்சனை எனும் அர்ப்பணிப்பு !
வழிபாட்டின் ஒரு அங்கம் அர்ச்சனை. அர்ச்சனை என்பதற்கு “அர்ப்பணித்தல்” என்று பொருள். இறைவனுக்கு எல்லாவற்றையும் அர்ச்சனை மூலம் அர்ப்பணித்து விடுகின்றோம். அதனால் தான் அர்ச்சனைக்காக கொண்டு வந்த எந்தப் பொருளையும் கொண்டு வந்த படியே திருப்பி எடுத்துச் செல்வதில்லை.
எந்த ஆலய வழிபாட்டிற்குச் சென்றாலும் வாங்கிச் செல்லக்கூடிய அர்ச்சனைப் பொருட்களில் அந்தந்த தெய்வத்திற்கு உகந்த பூக்களைத் தவிர தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, பத்தி, சூடம், விபூதி, குங்குமம் ஆகியவைகள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இவைகள் மட்டும் அப்படி என்ன உசத்தி? இப்படி கேள்வி கேட்பீர்களேயானால் அது தவறில்லை. அறிந்து கொள்ளும் நோக்கில் கேட்கப்படும் இது போன்ற கேள்விகளே ஆரோக்கியமான ஆன்மிக வளர்ச்சி பெறுவதற்கு உரிய சரியான அணுகுமுறை. இறைவன் இருக்கின்றான் என்றால் அவனை எனக்குக் காட்ட முடியுமா? என்ற கேள்வி நரேந்திரனை விவேகானந்தராக்கியது. அறிவின் எழுச்சியில் பிறக்கும் இது போன்ற கேள்விகளுக்கான பதில்களில் ஆன்மிகத்தின் அற்புதங்கள் புதைந்து கிடக்கின்றன.
Friday, 28 December 2018
கூடாதவை தவிர்ப்போம் !
துளசிதேவியைப் போல சிவனின் வழிபாட்டிற்குத் தாழம்பூ உகந்ததல்ல. இதை சிவபெருமானே சொல்லி இருக்கிறார். தன்னுடைய முடியையும், அடியையும் காணும் போட்டியில் பிரம்மனோடு சேர்ந்து பிராடுத் தனம் செய்ததால் தாழம்பூவுக்கு இந்தத் தண்டனை கிடைத்தது. இப்படி இறைவன் தனக்கு உகந்தவை அல்ல என விலக்கியதை நாம் அத்தெய்வங்களின் வழிபாட்டிற்கு வாங்கிச் செல்லக்கூடாது.