பூங்கா ஒன்றில் நடந்து கொண்டிருந்த டால்ஸ்டாய் எதிரில் வந்தவரைப் பார்த்து ஹலோ, எப்படி இருக்கிறீர்கள்? என்று விசாரித்தார். அவரோ நான் உங்களை இதுவரை சந்தித்ததே இல்லை. அப்படியிருக்க என்னிடம் என்ன விசாரிப்பு வேண்டிக் கிடக்கு? என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். மறுநாளும் அந்தப் பூங்காவிற்கு வந்த டால்ஸ்டாய் அதே நபரைச் சந்தித்ததும் “நேற்று நாம் இருவரும் சந்தித்துக் கொண்டோம். அதனால் இன்று என்னைத் தெரியாது எனச் சொல்லி விடாதீர்கள். நலமா?” என்று கேட்டாராம். டால்ஸ்டாயாது அவருக்கு முன், பின் அறிமுகமில்லாத நபரைச் சந்தித்தார். ஆனால் நாம் நம்மை நன்கு அறிந்தவர்களிடமும், நம்மோடு இருக்கும் சக ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்களிடமும் கூட இப்படியான மனநிலையில் தான் பழகுகிறோம். புறக்கணிப்புகளின் வழி முன்னேறிச் செல்ல நினைக்கிறோம். ”எல்லா நோய்களுக்கும் மருந்து உண்டு. ஆனால் புறக்கணிப்பு என்ற நோய்க்கு மட்டும் மருந்தே கிடையாது. எனவே யாரையும் அலட்சியப்படுத்தாதீர்கள்” என்கிறார் இங்கர்சால்.
Tuesday, 13 June 2017
Wednesday, 7 June 2017
Wednesday, 31 May 2017
ஆதலால் விட்டுக் கொடுங்கள்!
வீட்டில் தனக்கு மதிப்பிருக்கிறதோ இல்லையோ தன் சொல்லுக்கு மதிப்பிருக்க வேண்டும் என நினைப்பவள் மனைவி. தான் சொல்வதைக் கணவன் காது கொடுத்துக் கேட்டாலே தனக்கு மதிப்பும், மரியாதையும் குடும்பத்தில் இருப்பதாக அவளுக்கு ஒரு நினைப்பு! மனைவியின் இந்த நினைப்பு பல வீடுகளில் நிறைவேறாமலே நீர்த்துப் போய்விடுகிறது. காரணம், மனைவி சொல்வதை, பேசுவதை எந்தக் கணவனும் காது கொடுத்துக் கேட்பதில்லை. இரசிப்பதில்லை. காதல் மனைவியாக இருந்தால் கூட திருமணத்திற்கு முன் கற்கண்டாய் இனிக்கும் அவள் பேச்சு திருமணத்திற்கு பின் பாகற்காயாய் கசக்கிறது கணவனுக்கு!
Thursday, 16 February 2017
விமர்சனங்களை உங்களுக்கானதாக்குங்கள்!
ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன் அதனைச் செய்வதற்கான வழிமுறைகளுக்காகத் தரப்படுபவைகள் ஆலோசனைகளும், அறிவுரைகளும். அந்தச் செயலைச் செய்து முடித்த பின் தரப்படுபவைகள் விமர்சனங்கள். இவைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஒன்றையொன்று குழப்பிக் கொள்கிறோம்.
விமர்சனங்களுக்கு உள்ளாகி விடுவோமோ? என்ற பயத்தில் நம்மை நோக்கி வரும் நல்ல வாய்ப்புகளைக் கூட விட்டு விடுகிறோம். வசதியானவர்களுக்கும், சாதனையாளர்களுக்கும், வெற்றியாளர்களுக்கும் மட்டுமே வாய்ப்புகள் அமைவதாகப் புலம்பிக் கொண்டிருக்கிறோம். உண்மை அதுவல்ல! வாய்ப்புகள் எல்லோருடைய வாழ்க்கையிலும் பலமுறை வந்து செல்கின்றன. வாசல் கதவைத் தட்டிப் போகின்றன. ஆனால், அதன் பொருட்டு வரும், வரப்போகும் விமர்சனங்களுக்குப் பயந்து அவைகளை ஏற்காமல் நின்று விடுகிறோம். இதனால் தான் ”வாழ்க்கையே ஒரு வாய்ப்பு” என்றார் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி.