Wednesday, 26 December 2018

அபி ஆல்பம் - 02

"தமிழ் இந்து" நாளிதழில் மகன் அபிலேஷின் ஓவியம்


தூய்மையில் தொடங்கும் பக்தி!

பக்தி செலுத்துவதற்குரிய வழிகளில் ஒன்றான வழிபாட்டின் போது பின்பற்ற வேண்டிய சில வரைமுறைகளை நம் முன்னோர்கள் காரணங்களோடு சொல்லித் தந்திருந்தனர். முறையான இறைவழிபாட்டை மறந்ததைப் போல இவைகளையும் மறந்து போனோம். மறந்ததை நினைவூட்டிக் கொள்ளவோ, அறிந்து கொள்ளவோ முடியாத வேக வாழ்க்கையில் சம்பிரதாயம் என்ற பெயரில் வழிபாட்டை மட்டுமாவாது தொடந்து செய்து வருகின்றோம். அந்த மட்டும் சந்தோசப்பட்டுக் கொண்டாலும் காரணம் அறிந்து காரியம் செய்யும் போது அதில் ஈடுபாடு அதிகரிக்கும். ஈடுபாடு பக்திக்கு அடிப்படை. 

Monday, 24 December 2018

குழந்தைகளின் சிநேகிதம் ....

மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் முதல் முறையாக மகன் பங்கேற்றிருந்தான். அவனுடைய நண்பர்களும் அதில் கலந்து கொண்டிருந்தனர்.

காலையில் அரங்கில் கொண்டு போய் விட்டேன். மொத்தம் ஐந்து சுற்றுகள். மதிய உணவிற்கு முன் மூன்று சுற்று முடிந்து விடும் என விபரம் கேட்டுச் சொன்னான்.

வரும் போது மதிய சாப்பாடு எடுத்துக் கொண்டு வருகிறேன் என சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

மதியம் சென்ற போது கொஞ்சம் முகவாட்டத்தோடு நின்றான். விசாரித்த போது, "இரண்டு ரவுண்டுல வின் பண்ணிட்டேன். மூனாவது ரவுண்டுல போச்சு டாடி. சின்ன மூவ். நகர்த்த கூடாதுன்னு நினச்சிக்கிட்டே இருந்தேன். ஆனா நகர்த்திட்டேன். அடிச்சு காய தூக்கிட்டான் " என்றான்.

Sunday, 23 December 2018

புத்தகப் பைக்கு பூட்டு !

குழந்தைகளோடு பேசிக் கொண்டிருந்த போது திருடர்கள் பற்றிய பேச்சு வந்தது.

சட்டென அங்கிருந்து எழுந்த மகன் தன் புத்தகப் பைக்குப் போட்டிருந்த பூட்டைக் காட்டினான். கூடவே, "டாடி எங்க வகுப்பில் இருக்கும் ஒரு பையன் பயங்கரமா திருடுறான். என் ஹிண்டு நியூஸ் பேப்பர், மணிபர்ஸ், ஆங்கில நோட்டு எல்லாத்தையும் அவன் தான் திருடியிருக்கிறான். எல்லாத்தையும் கண்டுபிடிச்சு வாங்கியாச்சு" என்றான்.

நண்பர்களுக்கிடையே விளையாட்டாய் அப்படி செய்திருக்கக் கூடும் என்ற நினைப்பில், "உனக்கிட்ட மட்டும் தான் திருடினானா?" என்றேன். 

இல்ல, எல்லார் பேக்கில் இருந்தும் திருடியிருக்கிறான்.