Sunday 23 December 2018

புத்தகப் பைக்கு பூட்டு !

குழந்தைகளோடு பேசிக் கொண்டிருந்த போது திருடர்கள் பற்றிய பேச்சு வந்தது.

சட்டென அங்கிருந்து எழுந்த மகன் தன் புத்தகப் பைக்குப் போட்டிருந்த பூட்டைக் காட்டினான். கூடவே, "டாடி எங்க வகுப்பில் இருக்கும் ஒரு பையன் பயங்கரமா திருடுறான். என் ஹிண்டு நியூஸ் பேப்பர், மணிபர்ஸ், ஆங்கில நோட்டு எல்லாத்தையும் அவன் தான் திருடியிருக்கிறான். எல்லாத்தையும் கண்டுபிடிச்சு வாங்கியாச்சு" என்றான்.

நண்பர்களுக்கிடையே விளையாட்டாய் அப்படி செய்திருக்கக் கூடும் என்ற நினைப்பில், "உனக்கிட்ட மட்டும் தான் திருடினானா?" என்றேன்

இல்ல, எல்லார் பேக்கில் இருந்தும் திருடியிருக்கிறான்.


மிஸ் கிட்ட சொன்னீங்களா?

மிஸ் தான் அந்தப் பையனைக் கண்டுபிடிச்சாங்க

மிஸ் என்ன செஞ்சாங்க?

"
நீங்க எதுவும் செய்யலையா? அவங்கிட்ட இதெல்லாம் தப்புன்னு சொல்லியிருக்கலாம்ல" என்றேன்.

"எல்லா பசங்களும் அவன்ட்ட இருந்து தப்பிக்கிறதுக்கா ஸ்கூல் பேக்குக்கு பூட்டு போட்டுட்டோம்" என்றான்.

அப்படி செய்றதாலா என்ன பிரையோஜனம்?

"எல்லா பேக்கும் பூட்டியிருக்கிறதால அவன் எதையும் எடுக்க முடியாதுல. அப்புறம் எடுக்கனும்னு அவனுக்கு தோணாதுல டாடி" என்றான்.

நடைமுறை வாழ்க்கையில் இந்த யோசனை அத்தனை உசிதமல்ல என்றாலும் அவன் சொன்னதைக் கேட்டதும், "வளர்ந்த நாம் தான் யோசனை சொல்லனும். தண்டிக்கனும்னு நினைக்கிறோம். ஆனால், குழந்தைகள் அப்படி அதிமேதாவியாய் யோசிப்பதில்லை. தவறுகளை தடுப்பதன் மூலம் நிறுத்த முயல்கிறார்கள். அதுவும் அவர்கள் வயதுக்கேற்ற சாத்திய வழிகளில் மட்டும்" என்று தோன்றியது.

1 comment:

  1. இன்றைய குழந்தைகளிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது...

    ReplyDelete