கவிஞர்.
வைரமுத்து தன் சுய
சரிதையின் இரண்டாம் பாகத்தை எழுத
அனுமதி கேட்ட போது
அப்போதைய ஆனந்த விகடனின்
ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்கள் “வேண்டாம்” எனச்
சொல்லி விட்டாராம். முதல்
பாகத்தைப் போல் இரண்டாம் பாகத்தில் உண்மைத் தன்மை
இருக்காது என்பதை காரணமாகச் சொன்னாராம். அதன் பிறகே
“கள்ளிக்காட்டு
இதிகாசம்’ எழுத ஆரம்பித்தார். கலைஞரின் நெஞ்சுக்கு நீதி
நூலின் பிந்தைய பாகங்களில் அவர்
உண்மைகளை மேம்போக்காகச் சொல்லிச் சென்றதால் அதில்
அத்தனை லயிப்பில்லை என
சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
சுய சரிதைகளில் பல உண்மைகளைச் சொல்ல வேண்டும் என்பதாலயே ஆர்.வி. வெங்கட்ராமன், சோ ராமசாமி, டி.என்.சேஷன் ஆகியோர் வாய்ப்பும் – வசதியும் இருந்தும் அதைச் செய்யவில்லை என வாசித்திருக்கிறேன். சுய சரிதை எழுதுவது என்பது அவ்வளவு சிக்கலானது. சிலாகித்து எழுத முடியாதது.