அவன்
அவள்
”அவர்கள்”ஆனது.
போடா
போடி
“போங்கள்” ஆனது.
நான்
நீ
“நீங்கள்” ஆனது.
திருவளர் செல்வன்
திருவளர் செல்வி
“திருவாளர்” ஆனது.
திருமணம் தந்த
இந்த திருத்தங்களுக்கு
திருப்பலியானது
இரு மனங்களின்
உணர்வுகளும், விருப்பங்களும்.
நன்றி : கீற்று