Sunday, 18 August 2013

வசைச்சொல்

எவரிடமும்
பறித்து உண்ணாது
எதன் பொருட்டும்
வாய்ச்சவடால் செய்யாது
துருத்தித் தெரியாத
பாவங்களைச் சுமக்காது
தன் சுகமென்பது கூட
தன்னை லயிப்பதே
என்றிருப்பவனை நோக்கி
எப்பொழுதும் வீசிக் கொண்டே இருக்கிறோம்
பைத்தியம்என்ற வசைச்சொல்லை.

நன்றி : திண்ணை