Friday, 27 November 2015

கீழே போட்டு விடாமல் எழுதுங்கள்!

 

கடந்த வாரம் புத்தக வெளியீட்டு விழா ஒன்றிற்குச் சென்றிருந்தேன். புத்தகத்திற்கான அன்பளிப்புத் தொகையை வைத்துக் கொடுக்கும் கவரின் மேல் வாழ்த்துகள் என எழுதி பெயரிட்டுத் தர என் வசம் பேனா இல்லாததால் அருகில் இருந்த ஒரு அன்பரிடம் இரவல் கேட்டேன். அவரை அந்த நிகழ்வில் தான் முதன் முதலில் பார்க்கிறேன். கடந்த காலங்களில் இரவல் கொடுத்து பறிகொடுத்த அனுபவமோ என்னவோ பேனாவின் மூடியைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டு பேனாவை மட்டும் என்னிடம் தந்தார்.

பேனா என் கைக்கு மாறியதும் புது விதமான முன்னெச்சரிக்கை குறிப்பாய்கீழே போட்டு விடாமல் எழுதுங்கள்என்றார். எழுதும் போது எப்படிக் கீழே போட முடியும்? என்ற எண்ணம் தம்பி இராமையாவின் மாடுலேஷன் வாய்சில் மனதில் தோன்ற அவரிடமிருந்து என் கைக்குத் தாவி இருந்த பேனாவால் கவரின் மேல் "வாழ்த்துக்கள்" என எழுதினால் முதல் எழுத்தைக் கூட பேனா எழுத மறுத்து நின்றது

Tuesday, 24 November 2015

தனக்கான வாழ்விடம்


இழைவதற்குள் அதன் இருப்பிடத்தை

இடம் மாற்ற வேண்டுமென

அங்கலாய்த்தார் அப்பா.

 

கொஞ்ச நாளில்

அதுவே இடம் பெயருமென

அன்பு காட்டினாள் அம்மா.

Saturday, 21 November 2015

உந்துதல் தந்த உபதேசங்கள் - 3

கணவன் மனைவிக்கிடையேயான வாய்சண்டைகளில் ஒருவர் மட்டுமே இயங்க வேண்டும். கட்டில் சண்டைகளில் இருவரும் இயங்க வேண்டும்இந்த இங்கீதம் தெரிந்தால் வாழ்க்கை சங்கீதமாகும்.

தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவாத தேடல்களால் ஒரு பயனுமில்லை, ”தேடல்கள் வழி தேவைகள் கிடைக்கலாம்என்பது ஆறுதலுக்கான வார்த்தைகள்!

உன் கையில் வைத்திருப்பது அஸ்திரம் என்றும், அது செலுத்தப்படுவதற்கானவை என்றும் முதலில் நம்பு. எதை நோக்கிச் செலுத்துவது? என்பதை அதன் பின் முடிவு செய்து கொள்ளலாம்.

Thursday, 19 November 2015

புதைந்திருக்கும் இரகசியம்


அகோரப்பசியின் வேட்கையோடு அலசிய பின்னும்

அகப்படவில்லை அந்த நூறு ரூபாய்.

 

எப்பொழுதோ தொலைந்தவைகளோடு மறந்தவைகளும்

உயிர்த்தெழுந்ததில் தொற்றியது பதற்றம்.

 

இயல்பற்ற என் தேடல் கண்டு

நான் தருகிறேன் எனக் கரிசனம் காட்டுகிறார் அப்பா

Monday, 16 November 2015

மழை நாள் நினைவலை!

தனித்திருக்கும் நம் அறையின் சாளரத்தைச் சாத்து. அகல விரித்து இறங்கும் மழை வெட்கத்தால் திரும்பி விடப் போகிறது!

ஒரு சூடான தேநீர்......மென் அணைப்பு.....உடல் உருள தீண்டும் முத்தம்.....உள்ளங்கை சூடு....... இந்த மழையின் இதத்தைக் கடந்து செல்ல என்ன வேண்டும்? என்கிறாய்.

எதிர்பார்ப்பின்றி என் கைபற்றி மழையோடு இறங்கி வா. அது நாம் நினைக்காத எதையேனும் தரக்கூடும்.