"நியூஸ் பேப்பர்ல பவுல் செய்யனும்னு அசைன்மெண்ட் தந்திருக்காங்க டாடி" என்றாள் மகள்.
அதுக்கென்ன செஞ்சிடுவோம் எனச் சொல்லி வைத்தேன்.
சொன்னதை மறந்திருந்த தருணமெல்லாம் அவள் நினைவூட்டிக் கொண்டேயிருந்தாள்.
நேற்று பள்ளியில் இருந்து திரும்பியவள், "நாளைக்கு காலையில பவுல் செய்து கொண்டு போக வேண்டும். இரவு உங்க வேலையைப் பார்க்காம எனக்கு ரெடி பண்ணித் தரப் பாருங்க" என்றாள்.
அந்த இரவை ஒரு கட்டுரை எழுதுவதற்குப் பயன்படுத்த நினைத்திருந்தேன்.
மகள் சொல்லி மறுப்பதா? என்பதை விட அவளுக்குக் கொடுத்த உறுதி மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்பதால் அவளோடு விழித்திருந்து சின்ன, சின்ன உதவிகளைச் செய்தேன்.
ஒரு உதவியாளனிடம் சொல்வதைப் போல சில விசயங்களைச் செய்யச் சொன்னாள்.
இரவில் கொஞ்சம், அதிகாலை கொஞ்சம் என நேரத்தை ஒதுக்கி அவளுக்கு வழிகாட்டியதில் பவுலை வடிவமைத்து முடித்திருந்தாள்.
நேற்றிரவு எழுத நினைத்திருந்த கட்டுரையை விடவும் வடிவாய் இருந்தது அவளின் முயற்சி!
அருமை... வாழ்த்துகள்...
ReplyDelete