ஊழலை ஒழி என்கின்றோம்
ஓட்டுரிமையை செலுத்த
பணம் பெறுகின்றோம்.
சாதியை நீக்கு என்கின்றோம்
சாதிக்கென தனிஒதுக்கீடு கேட்கின்றோம்.
சட்டத்தை கடுமையாக்கு என்கின்றோம்
பாராளுமன்றத்தை தாக்கியவனுக்கு
பாவமன்னிப்பு கோருகின்றோம்.
ஆயுத பலம் பெறு என்கின்றோம்
அணு ஆயுதங்கள்
வேண்டாமென சொல்கின்றோம்.
இலவசம் தராதே என்கின்றோம்
மானியம் கேட்டுப் போராடுன்கிறோம்.
இத்தனை குழப்பங்களுக்கு இடையிலும்
வெட்கமில்லாமல் பீற்றித்திரிகின்றோம்
“வல்லரசை நோக்கி நாங்கள்”என்று!
நன்றி : வெற்றிநடை