கடந்த ஓர் ஆண்டாக எனது மேஜையில் நான் பத்திரப்படுத்தி
வைத்திருக்கும் புத்தகம் ஒன்று உண்டு. மு.கோபி சரபோஜி எழுதிய “கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி”
என்ற அந்தப் புத்தகத்தை இதுவரை ஆறேழு தடவைகள் படித்தும் விட்டேன். வ.உ.சி.யின் கடைசி
நாட்களை கோபி சரபோஜி அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார்.
மு.கோபி சரபோஜி ஒரு விசயத்தையும் விடவில்லை.
எந்தவித தாக்கத்தாலும் பீடிக்கப்படாமல் உள்ளது உள்ளபடி வ.உ.சி..பற்றி பதிவு செய்திருக்கும்
அவருக்கு எனது பாராட்டுகள். கோபி சரபோஜியின் புத்தகத்தைப் பள்ளியில் பாடமாக வைக்க வேண்டாம்.
குறைந்தபட்சம் தமிழுணர்வாளர்கள், தேசியவாதிகள் படிக்கவாவது வேண்டாமா? தங்கள் வீட்டுக்
குழந்தைகள் படிக்கவாவது வாங்க வேண்டாமா?
- தினமணி
- கலாரசிகன்