ஓரடுக்கில்
இரண்டு வீடுகள்
வாசலை வசீகரிக்கும்
வாகனங்கள்
கழுத்திலும் கையிலும் வருடும்
தங்கக் குழல்கள்
சேமிப்பில் உறங்கும்
காந்தித் தாள்கள்
திரைகடல் ஓடியதில்
மிச்சமாய் இவை நிற்க
எச்சம் தேடி அலைகிறது
தவறிப்போன இளமை.
நன்றி : முத்துக்கமலம்