(”வல்லமை” இணைய இதழில் “வல்லமையாளர் விருது”க்கு தேர்வான கவிதை)
பெற்றோர்களே......
வயது போனதற்காய்
நீங்கள்
உதிரமும், உணவும் தந்து
கை தூக்கிவிட்ட பிள்ளைகள்
உங்களை
கைவிட்டு விட்டதை எண்ணி வருந்தாதீர்கள்.
நீங்கள் - விருட்சம்
அவர்கள் - விதை.
விழுந்து எழுவது தானே
விதையின் குணம்.
விட்டு விடுங்கள்
எழும் போதாவது
வீரியமாய் எழட்டும்
நன்றி : வல்லமை