மகளோடிருந்த தினப்பொழுதொன்றில்
திருகல் படாமல் கிடந்தகீறலற்ற வெள்ளை காகிதத்தை
நான்காய் மடித்து பந்தாக்கியும்
எட்டாய் மடித்து விமானமாக்கியும்
பத்தாய் மடித்து பறவையாக்கியும் காட்டினேன்.
நான்காய் மடித்து பந்தாக்கியும்
எட்டாய் மடித்து விமானமாக்கியும்
பத்தாய் மடித்து பறவையாக்கியும் காட்டினேன்.
சிதறாப் புன்னகையோடு
என் விரல்களுக்குள் இருந்து தன் விரல்களுக்குள்
காகிதத்தை மாற்றிய மகள்
மடிப்புகளை நீக்கி மென்மையாய் நீவி
தன் தம்பியிடம் தந்து
அப்புறமா எடுத்துக்கலாம்…….இப்ப வச்சுக்கோ என்றாள்.
அவஸ்தையினின்று மீண்ட காகிதம்
எந்த சலனமுமின்றி தயாரானது
இன்னொரு அறையப்படலுக்கும்
அதன் வழி உயிர்த்தெழலுக்கும்.
நன்றி : எதுவரை?