Monday, 30 March 2015

நனவுதேசம்

சிங்கப்பூர் பொன்விழா நிகழ்வையொட்டி சிங்கப்பூர் சார்ந்த தகவல்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் ஷாநவாஸின் நூல்நனவு தேசம்”. சிங்கப்பூர் என்றவுடன் கனவு தேசம் என்று தான் பலருக்கும் நினைவுக்கு வரும். இவரோ நனவு தேசம் எனப் பெயர் வைத்துள்ளார். இந்தப் பெயர் தான் நூலிற்குள் நுழைவதற்கான திறப்பின் ஆவலை அதிகரிக்கச் செய்தது. ஒருவேளை கனவு தேசம் எனப் பெயர் வைத்திருந்தால் நாடுகளின் பிம்பங்களைப் பதிவு செய்து சந்தைக்கு வந்து குவிக்கின்ற ஒரு நூலாக நினைத்து புறந்தள்ளிப் போயிருக்க வாய்ப்புண்டு. என்னுரையில் தன் கனவுகளை நனவாக்கிய தேசம் என்பதால் நனவு தேசம் என நூலுக்கு பெயரிட்டதற்கான குறிப்பைச் சொல்கிறார்.

நாட்டின் பரப்பளவில் தொடங்கி அங்கு இருக்கும் சுற்றுலாத் தலங்கள், சீதோஷ்ண நிலை வரை பரவி நிற்கும் தகவல்களால் சிங்கப்பூரைப் பற்றிய பிம்பத்தை நம் முன் காட்டும் வழக்கமான புத்தகமாக இல்லாமல் அந்த தேசத்தைப் பற்றி  அறிந்திராத, அறிந்து கொள்ள வேண்டிய புதிய தகவல்களை, அங்கு வாழும் பல்லின மக்களின் வாழ்வியல் மனநிலையைப் பதிவு செய்த படியே சிங்கப்பூரின் பிம்பத்தை புதிய கோணத்தில் விரித்துச் செல்கிறது நனவு தேசம்.

Monday, 16 March 2015

ரசிக்க – சிந்திக்க – 8

 

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் பேசும் ஒவ்வொரு முறையும்  நிறையப் புத்தகங்களில் இருந்து மேற்கோள்கள் காட்டிப் பேசுவார். எப்பொழுதும் நேரமில்லை, நேரமில்லை எனச் சொல்லும் நேருவுக்கு புத்தகங்கள் படிக்க மட்டும் எப்படி நேரம் கிடைக்கிறது? என்பது மன்ற உறுப்பினர்களுக்கு ஆச்சர்யமான விசயமாக இருந்தது.

ஒருநாள் அவர்கள் அவரிடம் தங்கள் ஆச்சரியத்தைச் சொன்ன போது, ”நான் நேரத்தைத் திருடுகிறேன்'' என்று கூறினார். அதைக் கேட்டு குழம்பி நின்றவர்களிடம் "நான் இரவில் எப்போது தூங்கப் போக வேண்டும், எப்போது எழ வேண்டும் என்பதை என் உதவியாளர் தான் நிர்ணயிக்கிறார். அப்படி நான் உறங்குவதற்காக அவர் ஒதுக்கித் தரும் நேரத்தில் இருந்து ஒரு நாளைக்கு, இரண்டு மணி நேரத்தை திருடிக் கொள்கிறேன். அந்த இரண்டு மணி நேரத்தைத் தான் பல்வேறு புத்தகங்கள் படிக்கச் செலவிடுகிறேன்,'' என்றார்.

Wednesday, 11 March 2015

நினைவுகளின் துளிர்ப்பு


தூரத்து வானமாய்

எட்டாமலே போனது

நமக்குள் ஊடேறி கவிழ்ந்திருந்த நினைவுகள்.

கரைசேர வந்த அலையை

அள்ளிச்செல்லும் கடலாய்

நினைவுகளை வாரிக் கொண்டு திரும்பினோம்.

Monday, 9 March 2015

ரசிக்க – சிந்திக்க - 7

இந்தியக் குடியரசுத்தலைவராக இருந்த டாக்டர். இராதா கிருஷ்ணன் முதன் முறையாக அமெரிக்காவிற்கு சென்ற போது வாசிங்டனில் தட்பவெப்ப நிலை மோசமாக இருந்தது. காற்று, இருள் இவற்றோடு பலத்த மழையும் பெய்ய ஆரம்பித்திருந்தது. விமானத்தை விட்டு இறங்கிய இராதா கிருஷ்ணனை வரவேற்ற அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி தங்களுடைய பயணத்தின் போது இங்கே இவ்வளவு மோசமான தட்பவெப்ப நிலை இருப்பதற்காக வருந்துகிறேன் என்று கூறினார்.