கட்டுரையைப் பேசி முடிச்சதும் எல்லோரும் கை தட்டிப் பாராட்டுனாங்க.
வேற எதுவும் சொல்லலையா?
பாடி லாங்வேஜ் போதலைன்னு எங்க மிஸ் சொன்னாங்க. ஆனால், எல்லாக் கிளாசிலும் பிள்ளைகள் பேசி முடிச்சப் பிறகு தான் ரிசல்ட் சொல்லுவாங்களாம்.
அப்புறம்....
பெரிய மிஸ் நல்லா பேசினேன்னு சொன்னாங்க. உங்க அப்பா என்ன பன்றாங்கன்னு கேட்டாங்க?
நீ என்ன சொன்ன?
”ரைட்டர்”னு சொன்னேன்.
மகன் இதைச் சொன்னதும் எஸ். ராமகிருஷ்ணன் ஒருமுறை தன்னை ரைட்டர் எனச் சொல்லி அறிமுகம் செய்து கொண்ட போது கேட்டவரோ எந்த ஸ்டேசனில் எனத் திருப்பிக் கேட்டதாய் எழுதியது நினைவில் வந்து போனது. உடனே அதுக்கு பெரிய மிஸ் என்ன சொன்னாங்க? என்றேன்.
”நீங்க எழுதுன புத்தகத்தை அவங்க படிச்சிருக்கேன்னு சொன்னாங்க”ன்னு சொன்ன பதிலில் சத்தியத்துக்குச் சோதனை வராமல் போனதேன்னு ஒரு சந்தோசம்!