Tuesday 13 December 2016

தேவதைகளின் அட்டகாசம் - 12

டாடி......எங்க ஹவுஸ்க்கு ஆறுதல் பரிசு மட்டும் தான் கிடைச்சது

ஏன்

பிரசண்டேசன் (PRESENTATION)  செய்ய வாய்ப்பு இல்லாத டாப்பிக்கை எங்க ஹவுஸ்க்கு மிஸ் செலக்ட் செஞ்சிட்டாங்கள்ள.....

பிரசண்டேசன் இல்லாம எப்படி புராஜெக்ட் இருக்கும். மிஸ்கிட்ட கேட்டீங்களா

கேட்டோம்.

என்ன சொன்னாங்க?

பிரசண்டேசன் இருக்காம். ஆனால், செய்யலையாம்!!