போன ஒருவருசத்துக்கு மட்டும் நீயும், உன் தம்பியும் இருபத்தி இரண்டு சார்ப்னர்(SHARPENER), பத்து எரைஸ்ஸர்(ERASER), இரண்டு ஸ்கூல் பேக்(SCHOOL BAG), மூனு லஞ்ச் பேக் (LUNCH BAG) வாங்கி முழுசா யூஸ் பண்ணாம வீடு முழுக்க போட்டு வச்சிருக்கீங்க. காசோட அருமை தெரியாம நீங்க கேட்க, கேட்க ஒங்க அம்மாவும் வாங்கித் தந்திருக்கா. எல்லாத்தையும் கலெக்சன் பண்ணி தனித்தனியா வச்சிருக்கேன்.
குட் டாடி. அப்படித்தான் இருக்கனும். நீங்க அழகா எல்லாத்தையும் அடுக்கி வைக்க எதுவும் படிச்சிருக்கீங்களா?
நான் சீரியசா சொல்றது உங்களுக்கு விளையாட்டா இருக்கா?
டோண்ட் ஒரி டாடி. இந்த வருசத்துக்கு எனக்கும், தம்பிக்கும் நீங்க சொன்ன பொருள்ள எதுவும் வாங்கித் தர வேணாம். இருக்குறதையே யூஸ் பண்ணிக்கிறோம். எரைசர் மட்டும் பாடாவதியா இருக்கு. அதை மட்டும் துரோ பண்ணிட்டு ஆளுக்கு ஒன்னு புதுசா வாங்கிக் கொடுங்க போதும். எதுக்கும் அபிக்கிட்ட நான் சொன்ன படி செய்யலாமான்னு கேட்டுக்கிறேன். அவன் கத்துனாலும் கத்துவான்.
சரி. கேட்டுச் சொல்லு.
டேய்...நான் டாடிக்கிட்ட சொன்னது காதுல விழுந்துச்சுல. உனக்கு ஓ.கே.யா?
உனக்கு ஓ.கேன்னா எனக்கும் ஓ.கே.
டாடி இப்ப உங்களுக்கு ஓ.கே தான? கூல் டாடி. சீக்கிரமா வந்துடுங்க. ஒரு செப்பல் வாங்கனும்.