COMPCARE SOFTWARE நிறுவனத்தின் C.E.O. உயர்திரு. காம்கேர். புவனேஸ்வரி அவர்கள் I.T. துறையில் 28 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். தன் தொழில்நுட்பத் துறை சார்ந்த நூல்கள் உள்பட பலதரப்பட்ட துறைகள் சார்ந்து 150 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். பல நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாடங்களாக உள்ளன.
தன் கிரியா ஊக்கிகளை நம்மைப் போன்றவர்களும் இயங்குவதற்காக தன்னுடைய எழுத்து, பேச்சுகளின் வழியாக தரக்கூடியவர். நாள் தவறாது, நேரம் தவறாது 2019 ம் ஆண்டிலிருந்து இரண்டாண்டிற்கும் மேலாக தன் முகநூல் பக்கத்தில் அவர் எழுதி வரும் பத்திகளை வாசிக்கும் போது மனதில் சில கேள்விகள் எழும். அவைகளைத் தொகுத்து அவருக்கு அனுப்பி இருந்தேன். சில சமயங்களில் கேள்வியை விட அதற்காகச் சொல்லப்படும் பதிலால் அந்தக் கேள்வி அர்த்தமுள்ளதாகவும், அடர்த்தியானதாகவும் மாறிவிடும். அப்படி தனது பதில்களால் என் கேள்விகளை தனித்துக் காட்டியிருக்கிறார் என்றே சொல்லலாம்.
என் கேள்விகளை அவர் நேர்காணல் போலக் கருதி மிக அழகாக தொகுத்து பதில் கொடுத்திருந்தார். தனக்குக் கிடைத்த அனுபவங்கள், தான் எதிர்கொண்ட, பார்த்த நிகழ்வுகளின் வழியாகவே அமையும் அவரின் பதில்களிலிருந்து நம் அன்றாட தேவைக்கான ஆக்சிஜனைப் பெற முடியும். நான் பெற்றிருக்கிறேன். அவரிடம் நான் கேட்டிருந்த கேள்விகள் -
- நீங்கள் படித்து முடித்த நேரத்தில் நல்ல ஊதியத்தில் வேலைக்குச் சேர வாய்ப்பிருந்திருக்கும். safe zone என்ற பக்கத்தில் இருந்து விலகி சுய தொழில் என நீங்கள் முடிவெடுத்த போது குடும்பத்தினர், உறவினர்கள் என்ன சொன்னார்கள்? அப்படி தரப்பட்ட ஆலோசனைகளை அந்த சமயத்தில் எப்படி எதிர் கொண்டீர்கள்?
- தகவல்களில் அப்டேட்டாக இருப்பது, அன்றாட பணிகளைத் திட்டமிடுவது, புதிய முயற்சிகளை தன் துறையில் செய்து பார்ப்பது, நிறுவனத்தை பரவலாக அறிமுகம் செய்வது - இது தவிர ஒரு நிறுவனம் வெற்றி பெறுவதற்கும், அதைத் தக்க வைப்பதற்கும் தேவையான பிற விசயங்கள் எவை என நினைக்கிறீர்கள்?
- தனி நபருக்கோ, நிறுவனங்களுக்கோ ஒரு பணியை முடித்துக் கொடுத்த பின் அவர்கள் சொன்ன படி நடந்து கொள்ளாத போது ஏற்படும் ஏமாற்றத்தை (இழப்பை அல்ல) எப்படி கடந்து வருகிறீர்கள்?
- விருதுகளால் ஒரு படைப்பாளிக்கு கிடைத்து வந்த ஊக்கங்கள் விருதுகள் விற்பனைக்கு என்ற இன்றைய நிலையில் விருதுகளுக்காக படைப்பாளி இயங்குகிறான் என்ற கூற்று குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
- கடிவாளம் போட்ட குதிரையாய் இல்லாமல் பல தரப்பட்ட தகவல்கள், நீங்கள் கேட்ட, கவனித்த விசயங்கள், தகவல் தொழில் நுட்பங்கள், சினிமா இப்படி பல விசயங்களையும் பத்திகளாக்குவதாலயே நாள் தவறாது எழுத முடிகிறதா? அல்லது உங்கள் ஆர்வத்தாலும், விருப்பத்தாலும் அந்தத் தகவல்களை பத்திகளாக்குகிறீர்களா?
- பிற பதிப்பகங்களில் உங்கள் நூல்களை வெளியிடுவதற்கும், உங்களின் சொந்த பதிப்பகம் மூலம் பதிப்பிப்பதற்கும் என்ன வித்தியாசம்? பொதுவாக படைப்பாளிகள் இந்த இரு முயற்சிகளிலும் கிடைத்ததாய் சொல்லும் நல்ல, கசப்பான அனுபவங்கள் ஏதும் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?
- ஒரு வெற்றிகரமான பெண்மனியாக, சாதனையாளராக இருந்தும் இன்னும் இந்த இலக்கை அடைய முயன்று கொண்டேயிருக்கிறேன் என நீங்கள் நினைக்கும் விசயம் எது?
- உங்களின் துறை சார்ந்த பணிகளுக்கிடையில் தினம் ஒரு நூல் வெளியீடு, இரண்டாண்டுகளுக்கு மேலாக தினம் ஒரு பத்தியை குறிப்பிட்ட நேரத்தில் வெளியிடுவது, இணைய,அச்சு இதழ்களில் கட்டுரைகள் எழுதுவது ஆகியவைகளை முன் கூட்டியே திட்டமிடுகிறீர்களா? அல்லது தேடி வரும் வாய்ப்புகளை பயன்படுத்துகிறீர்களா?
- பல துறைகள் சார்ந்து 150 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறீர்கள். அதற்கான நேரத்தை உங்களின் தினப்படி நேரங்களிலிருந்து எப்படி திருடுகிறீர்கள்?
- வெற்றியாளராக இருப்பதை விட அதைத் தொடர்ந்து தக்க வைப்பது தான் இன்றைய வெற்றியாளராகளுக்கு சவாலான விசயமாக இருக்கிறது. ஒரு தொடர் வெற்றியாளராக இருக்கும் நீங்கள் அதற்குச் சொல்லும் இரகசியம் என்ன?
பதில்களை வாசிக்க அவரின் இணைய பக்க முகவரிக்கு இங்கே சென்று திரும்புங்கள். புதையல்களை அள்ளி வருவீர்கள்.
No comments:
Post a Comment