Saturday, 27 February 2016

”பாக்யா” பதாகை!

பாக்யா இதழில் அடுத்த வாரம் வெளிவரப்போகும் நீங்களும் வெற்றியாளராகலாம் என்ற என் தன்னம்பிக்கைத் தொடருக்கான விளம்பரம்


Wednesday, 24 February 2016

”பெண்டுல” மனசு

தவிர்த்திருக்கக் கூடிய

சாத்தியங்கள் இருந்தும்

தர்க்க ரீதியாய் ஏற்றுக் கொண்ட

சுவடுகளில் குதித்து ஓடுகிறது காலம்.

 

ஆண்டுகளைத் தின்று

செரித்துப் புதைந்த பாதத்தின்

ஆறாம் விரல்களின் வெற்றிடத்தை

மறைத்து நிற்கின்றன கரையோரப் புற்கள்.

Monday, 22 February 2016

”பூச்சாண்டி” காட்டும் ஆசிரியப் பெருந்தகை(லை)கள்!

நண்பரின் மகள் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். ஒன்பதாம் வகுப்பெல்லாம் முக்கியமில்லை. பத்தாம் வகுப்பில் பலம் காட்டினால் தான் எங்களுக்கெல்லாம் கெளரவம் என இப்போதே அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் பாடத்தை அக்கறையாய் நடத்தி வருகிறார்களாம். இந்நிலையில் தன் சித்தியின் வளைக்காப்பிற்காக விடுப்பு விண்ணப்பம் கொடுத்து வகுப்பாசிரியையின் முறையான அனுமதி பெற்றுச் சென்று விட்டு மறுநாள் பள்ளிக்கு வந்த நண்பரின் மகளை அப்பள்ளியின் தலைமையாசிரியர் தண்டனை என்ற பெயரில் வகுப்பறைக்கு வெளியில் நிறுத்தி வைத்திருக்கிறார். அந்த அவமானத்தால் அக்குழந்தை கண்ணீர் வடிய நின்ற போதும் அது பற்றிக் கவலைப் படாத அந்த ஆசிரியர் உனக்கு இன்னைக்கு இப்படி தண்டனை தந்தால் தான் மற்ற பிள்ளைகள் இனி லீவு எடுக்க மாட்டார்கள் என உபதேசம் வேறு செய்திருக்கிறார்.

Friday, 19 February 2016

பதக்கங்களால் ஜொலித்த சிங்கப்பூர்!

 
தென் கிழக்காசிய விளையாட்டுகள் (SOUTH EAST ASIAN GAMES) என்பதன் ஆங்கில முதல் எழுத்தைச் சேர்த்துச் சுருக்கமாகசீ விளையாட்டு” (SEA GAMES) என்றழைக்கப்படும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை இதற்கு முன் சிங்கப்பூர் மூன்று தடவை (1973, 1983, 1993) ஏற்று நடத்தியிருந்த போதும் இம்முறை அது சிங்கப்பூரின்  பொன் விழாவைக் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாகவும் திகழ்ந்தது. இருபத்தெட்டாவது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை ஜீன் மாதம் ஐந்தாம் தேதி தொடங்கி பதினாறாம் தேதி வரை நடத்தி கோலாகலப் படுத்திய சிங்கப்பூர் தன் மணி மகுடத்தில் மற்றுமொரு வைரத்தை சூட்டிக் கொண்டது.

Thursday, 18 February 2016

குறுக்குக் கோடு குணாவும், நாள்காட்டியும்

 
ஒரு விபத்து போலத் தான் அது நடந்தது என்று கேட்டும், வாசித்தும் அறிந்திருந்த குணா அதன் உள்ளார்ந்த பொருளை இப்போது உணரவும் தொடங்கி இருந்தான். தலையணையின் அருகில் வைத்திருக்கும் நாள்காட்டியில் வேலைக்குச் செல்லும் தினங்களைக் குறுக்குக் கோடிடுவது அவனின் வழக்கம். அதனாலயேகுறுக்குக் கோடு குணாஎன்ற பட்டப் பெயரில் அழைக்கப்பட்டான். கடந்த மூன்று நாட்களாக நாள்காட்டியில்  குறுக்குக் கோடிட முடியாமல் போனதை அவனின் துரதிருஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

பணிமனையில் கப்பலின் மேல் தளத்தில் அவனோடு வேலை செய்து கொண்டிருந்தவன் கால் இடறி கடலுக்குள் தவறி விழுந்தும் அவனைக் காப்பாற்றுவதற்காக இவனும் கடலுக்குள்  குதித்தான். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளும், மீட்பு நடவடிக்கைகளுக்கான அதிகாரிகளும் அவ்விருவரையும் கரைக்குக் கொண்டு வந்தனர். முதலுதவிகள் முடிந்ததும்நண்பேண்டாஎன மற்றவர்களின் பாராட்டுப் பூரிப்பில் நின்று கொண்டிருந்த குணாவிடம் பாதுகாப்பு அதிகாரி நாளை பணிமனைக்குச் செல்லாமல் என் அலுவலத்திற்கு வந்து விடு என்று சொன்ன போது தான் ஏதோ தவறாகி விட்டது என அவனுக்குத் தோன்றியது.