தானே நதியை
நகர வைப்பதாய்
சொல்கிறான் தலைவன்.
அந்த தலைவனுக்கு
தன்னுயிரும் கொடுப்பதாய்
நகர வைப்பதாய்
சொல்கிறான் தலைவன்.
அந்த தலைவனுக்கு
தன்னுயிரும் கொடுப்பதாய்
முழங்குகிறான் தொண்டன்.
தலைவனின் தந்திரமும்
தொண்டனின் தரித்திரமும்
தன்னைத் தீண்டிடாத
தனித்துவத்தோடு
தன்போக்கில் நகர்கிறது நதி!
தொண்டனின் தரித்திரமும்
தன்னைத் தீண்டிடாத
தனித்துவத்தோடு
தன்போக்கில் நகர்கிறது நதி!
நன்றி : சிகரம்