அம்மாவுக்கும், இலக்கியாவுக்கும் எதுவுமே தெரியல டாடி.
என்னடா தெரியல?
எல்லார் வீட்டுலயும் வாசல் (GATE) கதவைத் திறந்து உள்ளே போய் விசேசத்துக்கு வரச் சொல்லிட்டு வெளியில் வரும் போது திறந்த வாசல் கதவை மூடாமலே அம்மா வந்துடுறாங்க டாடி. அவங்க மூடாமல் வந்த வீட்டு வாசல் கதவை எல்லாம் நான் தான் மூடிட்டு வந்தேன். நாம திறந்த கதவை நாம தானே டாடி மூடனும்.
சரி
விடு, உங்க அம்மாக்கிட்ட சொல்லி இந்த மாதிரி நல்ல விசயத்தை எல்லாம் கத்துக்கச் சொல்றேன்.
அம்மா மாதிரி தான் இலக்கியா பிள்ளையும்.
அது என்ன செஞ்சுச்சு?
இலக்கியாவுக்காக தானே டாடி தினமும் ஸ்கூல் விட்டு வந்ததும் விசேசத்துக்குக் கூப்பிட எல்லாச் சொந்தகாரங்க வீட்டுக்கும் அம்மாவுக்குத் துணையா போயிட்டு வாரேன். எனக்குக் கால் எல்லாம் வலிச்சாலும் இரண்டு நாளா நான் ஹெல்ப் செய்றேன். அதுக்காக இரண்டு பேருமே ஒரு தேங்ஸ் (THANKS) கூட சொல்லல டாடி.
எக்ஸாம் அடுத்த மாதம் வருது. இரண்டு பேரும் பிரிப்பேரா இருக்கீங்களா?
அதெல்லாம் ஆகிக்கிட்டு இருக்கோம் டாடி. அப்புறம்?
ஏப்ரல் மாதம் எங்களுக்கு லீவு ஸ்டார்ட் ஆகுது.
அதுக்கென்ன?
மே மாசம் உங்களுக்கு எக்ஸாம் ஆரம்பமாகுது.
மகனுடனான உரையாடல் ஒரு குட்டிச் சண்டையாக மாறி விட கோபத்தில் எனக்கு அவன் எழுதிய கடிதம். டாடியிடம் இதைச் சொல்லிவிடுங்கள் என அவன் கேட்டுக் கொண்டதால் மனைவியும், மகளும் கர்ம சிரத்தையாய்(!) குறுஞ்செய்தியில் அனுப்பி வைத்திருந்தார்கள்.
Gopi saraboji daddy sorry....sorry...sorry... (31 times) daddy. But i don't talk with you. you also don't talk with me. so, do you want to talk with me that means you told to mummy give the phone to abilesh. but i don't talk with you. so, that you also tell to mummy to give the phone to me. please don't call to me. *mind it*. Today on wards i will don't bought snacks from the shop with got money from mummy. mummy please tell to dad.
by
G. Abilesh