சும்மா, சும்மா காசு கேட்கக் கூடாதுன்னு நீங்க சொன்னதால ஒரு டிராயிங் (DRAWING) வரைஞ்சு அம்மாக்கிட்ட கொடுத்துட்டு காசு கேட்டேன். நல்லா இருக்குன்னு மட்டும் சொல்லி வாங்கி வச்சுக்கிட்டு காசு தர மாட்டேங்கிறாங்க டாடி.
உனக்காக தினமும் அம்மா எல்லாம் செய்றா. அவளுக்குச் சும்மா கொடுத்ததா நினைச்சுக்க.
டாடி... தாத்தாவுக்குக் கொடுத்த டிராயிங்கை விட அம்மாவுக்குக் கொடுத்த டிராயிங்ல நிறைய கலர் கொடுத்து அட்டையில ஒட்டி சுவத்துல தொங்கப் போடுறது மாதிரி ஓட்டை போட்டு நூல் கோர்த்து செமையா செஞ்சு கொடுத்திருக்கேன் டாடி. அதுக்காகவாது ஏதாவது தரலாம்ல.
சரி. எவ்வளவு தரச் சொல்ல?
தாத்தா இருபது ரூபா கொடுத்தாங்க.
அவ்வளவு எல்லாம் உங்க அம்மா தரமாட்டா.
அப்ப...பத்து ரூபா?
அதுக்கும் முடியாதுன்னு சொல்லிடுவா. இன்னும் குறைச்சு சொல்லு.
அஞ்சு ரூபா?
இன்னும் கொஞ்சம் குறைச்சா நானே சொல்லி தரச் சொல்றேன்.
ஒரு ரூபா?
இப்பவே தரச் சொல்றேன்.
டாடி...ஒரு ரூபாய்க்கு டீ கூட குடிக்க முடியாது. டிராயிங் எப்படி இருந்துச்சுன்னு நீங்களே அம்மாக்கிட்ட கேட்டு்ட்டு அப்புறமா சொல்லுங்க.
சரி...இரண்டு பேருக்கும் பொதுவா அஞ்சு ரூபாய்னு வச்சுக்கலாம். அம்மாக்கிட்ட சொல்லி தரச் சொல்றேன்.
அம்மாவுக்காக தான் அஞ்சு ரூபாய்க்கு ஒத்துக்கிறேன்.