சுமந்து வந்த தலைப்பாகை
தன்னியல்பை இழக்க தயாராயிருந்தது.
போட்டு வந்த மேல்சட்டை
எடுப்பார் பிள்ளையாக எதிர்பார்த்திருந்தது
புறம் தள்ளி வந்த காலணிகள்
யார் வரவுக்கோ காத்திருந்தது.
இருபது வருடமாய் தொடரும் நிகழ்வு என்பதால்
அதைரியம் குறைந்திருந்தபோதும்...
உள்ளாடையற்ற கால்சட்டையை
பதறியபடியே பற்றி நிற்கிறது கைகளிரண்டும்!
நன்றி : நந்தலாலா