Sunday, 23 March 2014

சொல்லித்தர சாத்தியமான நிகழ்வு

மகளிடமும், மகனிடமும் ஒரு நல்ல நிகழ்வு ஒன்றிற்காக உனக்கு தெரிந்தவர்களிடமிருந்து நிதி திரட்டிக் கொண்டு வாருங்கள் என பள்ளியில் சொல்லி கூடவே பெயர், தொகை, உறவு முறை ஆகியவைகளை குறிப்பிடும் படியாக ஒரு படிவமும் கொடுத்து அனுப்பி இருந்தார்கள்.

வீட்டிற்கு வந்ததும் யாரிடமெல்லாம் போய் கேட்கன்னு சொல்லுங்கப்பா என்றாள் கள். (மகன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வில்லை போலும். அவன் கேட்கவில்லை!).

 எங்கள் குடும்பம் கூட்டுக்குடும்பம் என்பதால் ஒரு யோசனை  தோன்றவே பெரியப்பாவிடம் பெரியம்மாஅண்ணன் இருவருக்குமான காசை வாங்கி கொள். தாத்தாவிடம் அப்பத்தா, சித்தப்பா இருவருக்குமான காசை வாங்கிக் கொள். அம்மாவிடம் எனக்கு, தம்பி, உனக்குமான காசை வாங்கிக் கொள் என்றேன். இது நல்லா இருக்கே என்றவள், கலெக்க்ஷனை முடித்து விட்டு பெரியவர்களுக்கு பத்துசின்னவர்களுக்கு ஐந்து ரூபாய் என மொத்தம் 90 ரூபாய் சேர்ந்துள்ளதாய் சொன்னாள். தன் தம்பிக்கும் அப்படியே கலெக்க்ஷனை செய்து கொடுத்தாள். எல்லோரும் சேர்ந்து இருக்கிறதால தானே இப்படி செய்ய முடிஞ்சது என்று மகளிடம் சொன்னேன்.

ஆம் என்றவளுக்கு அதன் அர்த்தம் புரிந்ததா? என என்னால் சரியாக உணர முடியாவிட்டாலும் கூட்டுக்குடும்பத்தின் அவசியங்களை அல்லது உறவுகளிடம் இணக்கமாக இருத்தலை சொல்லித்தருதல் இப்படியான சமயங்களில் தான் சாத்தியமாகிறது.