சிங்கையில் உள்ளூர் விடுமுறை என எனக்குச் சொல்லப்பட்ட நாளில் உனக்கும் இன்னைக்கு ஸ்கூல் லீவா? என்று மகளிடம் கேட்டேன்.
தெரியல டாடி...என்றாள்.
மகள் படிக்கும் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியையிடம் போனில் கேட்கும் படி மனைவியிடம் சொன்னேன். அவளும் கேட்டு விட்டு, ”அவங்களுக்கும் இவ வகுப்புக்கு லீவான்னு கன்ஃபார்மா தெரியலையாம். ஸ்கூலுக்கு போனதும் பார்த்துட்டு சொல்லுவாங்களாம்” என்றாள்.
நானும் சரி என சொன்னேன்.
சட்டென மகள் கேட்டாள்.. டாடி.....அவங்க ஸ்கூலுக்கு போய் பார்த்துட்டு லீவு இல்லைன்னு சொன்னா எப்படி நான் போறது? ஸ்கூல் வேன் எட்டு மணிக்கே வந்துட்டு போயிடும்ல. அவங்க சொன்ன பின்னாடி போனாலும் லேட் அட்டண்டென்ஸ் ஆகிடும்ல? என்றாள்.
என்ன செய்யப்போற? என்றேன்.
வேனில் வரும் ஆயாகிட்ட லீவு லட்டர் கொடுத்து விடுவோம். எனக்கு கிளாஸ் இருந்தா லீவு லட்டரை எங்க மிஸ்கிட்ட கொடுத்திட சொல்லலாம். இல்லைன்னா கொடுக்க வேண்டாம்னு சொல்லிட்டு நாளைக்கு அதை திருப்பி வாங்கிக்கிடலாம் என்றாள்.
பட்டதாரிகளின் பயனின்மையை அப்பொழுது உணர்ந்தோம் நானும், என் மனைவியும்!