Thursday, 30 July 2015

புரட்சித் தலைவி “ஒளவையார்”!

சிங்கப்பூர் தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம் இவ்வாண்டு ஒளவையார் விழாவை நடத்தியது. கம்பன் விழா, கந்த சஷ்டி விழா, அண்டா, குண்டா அக்கப்போர்களுக்கு விழா எனப் பார்த்தே பழகி இருந்த எனக்கு முகநூலில்ஒளவையார் விழா 2015” என்ற அழைப்பிதழை பார்த்ததும் சற்றே ஆச்சர்யமாகத் தான் இருந்தது.

இதற்கு முன் இப்படியான விழாக்களுக்கு சென்றதில்லை என்பதால் இவ்விழாவில் என்ன மாதிரியான அங்கங்கள் இருக்கும் எனத் தெரிந்திராத நிலையில் இவ்விழாவிற்காக உருவாக்கப்பட்டிருந்த முகநூலின் சிறப்புப் பக்கத்தில் நான் அறிந்திருந்த நண்பர்களில் சிலர் அவர்களின் வருகையை உறுதி செய்திருந்ததாலும், நிகழ்வை ஏற்று நடத்தும் அமைப்பில் இருந்த தோழி அன்றைய தினம் மறு நினைவூட்டல் அழைப்பைக் கொடுத்திருந்ததாலும் நிகழ்விற்குச் செல்லும் துணிவு வந்தது.

Monday, 27 July 2015

புகைப்படம் – 15

எழுத்தாளர் ஷாநவாஸ் அவர்களின் நூலைப் பெற்றுக் கொண்ட போது


மக்கள் மனசு - 4

பாகிஸ்தான் விஷயத்தில் இந்தியா மெத்தனமாக நடந்துக்கொள்கிறது என்று ஒரு கருத்து எழுந்துள்ளது. இது குறித்து உங்கள் கருத்து......

அவசரப்பட்டு ராணுவ நடவடிக்கையை எடுப்பதில் உள்ள சிக்கல்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. சீனா அதைத் தனக்குச் சாதகமாக மாற்றி விடக்கூடும். இலங்கையை மையமிட்டு சீனா இந்தியாவை உளவு பார்க்க முயலும் நிலையில் பாகிஸ்தான் ஊடாக அதற்கான வாயிலை நாமே திறந்து விட்டு விடக்கூடாது. எல்லை மீறாத வரை பொறுத்திருக்கும் அதே நேரம் இரானுவ பலத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம்

Friday, 24 July 2015

மெளன அழுகை - 4

சிங்கப்பூரில் வசிக்கும் எழுத்தாளரும், பேச்சாளருமான அழகுநிலா அவர்கள் என் "மெளன அழுகை" கவிதைத் தொகுப்பிற்குத் தந்திருக்கும் அறிமுகம்

 

தமிழ் நிகழ்ச்சிகளில் இவரைச் சந்திப்பதுண்டு. மிகவும் அமைதியான,எளிமையான மனிதர். பதிப்பகங்கள் புத்தகம் போடச் சொல்லி இவரைக் கெஞ்சுவதாக (பொதுவாக எழுத்தாளர்கள் தான் பதிப்பகங்களை அணுகுவது வாடிக்கை) அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது. கிட்டத்தட்ட இருபத்தி மூன்று புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார் என்று அறிந்த போது ஆச்சரியமோ ஆச்சரியம்! தனது கவிதைப் புத்தகத்தை என்னிடம் தந்து விட்டு அவர் நகர்ந்த போதே கட்டாயம் அந்த நூலைப் படிக்க வேண்டுமென்று முடிவெடுத்து விட்டேன். அவரது கவிதைத் தொகுப்பின் பெயர்மெளன அழுகை”. எளிமையான சொற்களால் யதார்த்த வாழ்வைக் கவிதைகளில் புனைந்துள்ளார். இந்த தொகுப்பில் சில கவிதைகள் பெண்மொழியைப் பேசுவது எனக்கு அதிக வியப்பை அளித்தது.