Thursday, 31 March 2016

தேவதைகளின் அட்டகாசம் - 3

பள்ளியில் திருப்புதல் தேர்வு (MIDTERM EXAM) ஆரம்பமாகி இருந்தது. முதல் நாள் தேர்வு தமிழும், இந்தியும்! (என்னே ஒரு காம்பினேசன்). தேர்வு எழுதிவிட்டு வந்த மகளிடம் தமிழ் தேர்வு எப்படி இருந்தது? என்றேன்

நல்லா எழுதி இருக்கேன். ஆனால் நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும்னு நினைக்கிறேன் என்றவள், "டாடி..... தமிழ்ல அருஞ்சொற்பொருள் தானே ஈசி (EASE). கஷ்டமானதை எல்லாம் எழுதிட்டு ஈசியானதை எழுதாமல் விட்டுட்டு வந்திருக்கான் என மகன் தேர்வு எழுதிய விதத்தைப் பற்றிச் சொன்னாள்.

காரணம் தெரிந்து கொள்ளலாமே என மகனை அழைத்துக் கேட்டேன். அவனோ, ”டாடி..... இலக்கியா பிள்ளைக்கு ஈசின்னா எனக்கும் ஈசியா இருக்குமா? எல்லாமே ஈசின்னு அது சொல்லுது. எனக்குத் தெரியலைல. அதான் எழுதாமல் விட்டு விட்டேன்என்றான்.  

அதானே...எல்லாருக்கும் அருஞ்சொற்பொருள் ஈசியா இருக்கனுமா என்ன?

Wednesday, 30 March 2016

சலனக்கிரீடம்

மாறுபட்ட சந்தர்ப்பங்களில், மனநிலைகளில், தாக்கங்களில், வாழ்வியல் நெருக்கடிகளில் என்னைச் சலனப்படுத்திய விசயங்களே கவிதைகளாக இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இக்கவிதைகள் எனக்கு மட்டுமேயான அனுபவங்களாக இல்லாமல் இருப்பதும்உங்களின் அனுபவங்களை இந்தக் கவிதைகளின் வழியாக நீங்களும் நீட்டிப் பார்க்க முடியும் என்பதும் இத்தொகுப்பின் பலம் என நினைக்கிறேன்

இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கவிதைகள் அனைத்தும் பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் வெளியானவைகள்



Monday, 28 March 2016

ஆட்டத்தை ஆரம்பியுங்கள்!

நாம் ஒவ்வொருவருமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என விரும்புகிறோம். வெற்றியாளராக வலம் வர ஆசைப்படுகிறோம். இவ்விரண்டுமோ அல்லது இவ்விரண்டில் ஒன்றோ நிகழ வேண்டுமானால் அதற்குஇலக்குஎன்ற ஒன்று அவசியம் வேண்டும். அந்த ஒன்றை நோக்கி செயல் படுகின்ற போது தான் வெற்று வாழ்க்கை வெற்றி வாழ்க்கையாக மாறுகின்றது. “இலட்சியத்துக்காக பாடுபடாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை அல்லஎன்கிறார் மாஜினி.

இலக்கு குறித்து நம்மில் பலருக்கும் ஒரு தெளிவு இருப்பதில்லை. அது ஏதோ தனிப்பட்டவர்களுக்கும், ஆசீர்வதிக்கப்பட்டவர்களுக்கும் உரியதாய் எண்ணிக் கொள்கின்றனர். விண்ணில் ஏவுகணை ஏவுவதும், புதிய கண்டுபிடிப்புகளை செய்வதும், தன் ஆற்றலுக்கும், திறமைக்கும் மீறிய விசயங்களைச் செய்து காட்டுவதும் மட்டுமே இலக்கு என வரையறையற்ற இலக்குகளை குறிப்பிட்ட வரையறைகளுக்குள் வைக்கப் பழகி விட்டதன் விளைவாக நாம் வாழும் வாழ்க்கையை மிகச் சாதாரணமானதாகவும், மகிழ்ச்சியற்றதாகவும் ஆக்கிக் கொள்கின்றோம்.

Sunday, 27 March 2016

விரியும் வனம்

வாசிப்பு எதைத் தரும்? எனக் கேட்டால் அதற்கு அறுதியிட்ட பதிலைச் சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்குள்ளும் அது கிளர்த்தும் விசயங்கள் ஒவ்வொரு விதமாய் இருக்கும். அப்படி பல்வேறு காலகட்டங்களில் நான் வாசித்த நூல்கள் எனக்குள் கிளர்த்திய எண்ணங்களே இத்தொகுப்பில் கட்டுரைகளாக இடம் பெற்றுள்ளன

பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இக்கட்டுரைகள் வெளிவந்திருந்த போதும் சம்பந்தப்பட்ட நூல்களை இன்னும் சிலருக்குக் கொண்டு செலுத்த வேண்டும் என்பதே மின்னூலாக்கம் செய்வதற்கான தூண்டுதலாக அமைந்தது.