Ur Abi teach Karate to me. Force to me to learn……Please do something….save me - இப்படியான குறுஞ்செய்திகள் வழக்கமாக மகளிடமிருந்து வரும். நேற்று மனைவியிடமிருந்து வந்தது.
ஆரம்பிச்சுட்டானா? என நினைத்துக் கொண்டு மகனை அழைத்து ”டே….இப்ப இலக்கியா பிள்ளைய விட்டுட்டு உங்க அம்மாவ வம்புக்கு இழுத்துக்கிட்டு இருக்கியா? எனக்கு SMS அனுப்பி இருக்கா” என்றேன்.
வம்பெல்லாம் இழுக்கல டாடி…கராத்தேக்கு தான் வரச் சொன்னேன்.
இனிமே அவ கராத்தே கத்துக்கிட்டு என்னடா செய்யப் போறா? அவதான் வரலைன்னு சொல்றால.
நான் எனக்காக மட்டும் கூப்பிடல டாடி. அம்மாவுக்கும் சேர்த்து தான்!
அம்மாவுக்கும் சேர்த்தா?
ஆமாம். நான் கராத்தே சொல்லிக் கொடுக்கும் போது எனக்கு ஸ்டெப்ஸ் எல்லாம் ஞாபகம் வந்துடும். அதேமாதிரி அம்மா கத்துக்கும் போது இப்ப குண்டா இருக்கிற மாதிரி இல்லாம ஒல்லியா ஆகிடுவாங்க. அதுனால தான் கராத்தே சொல்லித் தாரேன்னு கூப்பிட்டேன். நீங்க எனக்கிட்ட கராத்தேக்கு டெய்லி வரச் சொல்லி அம்மாக்கிட்ட சொல்லுங்க.
அவன் சொல்றதும் சரியா தானே இருக்கு என்று மனைவியிடம். சொன்னதற்கு அப்பாவுக்கும், மகனுக்கும் என்னைய ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கனும். உனக்கிட்ட சொன்னேன் பாரு என்றாள் கோபமாக. இப்படியெல்லாமா சிக்கல் வரணும்?