உன் மெளனத்தால்
என் சப்தங்களைத் தூண்டுகிறாய்.
என் சப்தங்களோ
உன் மெளனத்தை
துண்டாட முனைகின்றன.
தூண்டலுக்கும், துண்டாடலுக்குமான
முடிவற்ற முரண்களோடு
அச்ச உணர்வற்று நகரும்
உனக்கும், எனக்குமான
நம் பொழுதுகள்
எப்பொழுதும் ஒழித்து வைத்திருக்கிறது.
நாம் சேர்ந்திருப்பதற்கான
ஏதோ ஒரு சூட்சுமத்தை!
நன்றி : கல்கி வார இதழ்