Thursday 31 March 2016

தேவதைகளின் அட்டகாசம் - 3

பள்ளியில் திருப்புதல் தேர்வு (MIDTERM EXAM) ஆரம்பமாகி இருந்தது. முதல் நாள் தேர்வு தமிழும், இந்தியும்! (என்னே ஒரு காம்பினேசன்). தேர்வு எழுதிவிட்டு வந்த மகளிடம் தமிழ் தேர்வு எப்படி இருந்தது? என்றேன்

நல்லா எழுதி இருக்கேன். ஆனால் நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும்னு நினைக்கிறேன் என்றவள், "டாடி..... தமிழ்ல அருஞ்சொற்பொருள் தானே ஈசி (EASE). கஷ்டமானதை எல்லாம் எழுதிட்டு ஈசியானதை எழுதாமல் விட்டுட்டு வந்திருக்கான் என மகன் தேர்வு எழுதிய விதத்தைப் பற்றிச் சொன்னாள்.

காரணம் தெரிந்து கொள்ளலாமே என மகனை அழைத்துக் கேட்டேன். அவனோ, ”டாடி..... இலக்கியா பிள்ளைக்கு ஈசின்னா எனக்கும் ஈசியா இருக்குமா? எல்லாமே ஈசின்னு அது சொல்லுது. எனக்குத் தெரியலைல. அதான் எழுதாமல் விட்டு விட்டேன்என்றான்.  

அதானே...எல்லாருக்கும் அருஞ்சொற்பொருள் ஈசியா இருக்கனுமா என்ன?

  •  

நீயும்தம்பியும் செய்ற விசயங்களுக்கெல்லாம் நான் சப்போர்ட் பண்ணிக்கிட்டே இருக்கேன்.

ஒருநாள் இல்ல ஒருநாள் கடுப்பாகி உங்க அம்மா எனக்குச் சோறு போடாமல் போகப் போறா பாரேன்.

டோண்ட் ஒரி டாடி…..நான் சோறு போடுகிறேன்

  •  

 ”அட்வான்ஸ் ஹேப்பி வாலண்டைன்ஸ் டே” டாடி.

எனக்கு நீ என்ன வாங்கித் தரப் போற?

அம்மாவுக்கு நீங்க முதலில் ஏதாவது வாங்கிக் குடுங்க”!
குட்நைட்”.

  •  

 அப்பாவை உங்களுக்குத் தந்துடுறேன்

எவ்வளவுக்கு?
ஃப்ரியாவே தாரேன்வச்சுக்கங்க.

  •  

பள்ளியில் இருந்து திரும்பிய மகள் சாப்பிட்டுக் கொண்டே அலைபேசியில் பேசினாள். ஒன்னு சாப்பிடு, இல்லை பேசு என்றேன். மனைவி சொன்னாள் அவ பேசி கதையடிச்சிட்டு அப்புறம் சாப்பிட ஆரம்பிச்சா டியூசனுக்கு எப்பப் போறது? பேசிக்கிட்டே சாப்பிடட்டும் அப்பத்தான் சீக்கிரமா கிளம்புவா.....குழந்தைகள் உலகத்துக்கு வந்த சாபக்கேடு இந்த வாழ்வியல் முறை!