Thursday, 27 December 2018

மொழிபெயர்ப்பு தந்த "கடுப்பு" ....

டாடி.....என்ஃப்ரண்ட எக்ஸாம் ஹால்ல பரீட்சை எழுத விடாம அபி டார்ச்சர் பண்ணி எடுத்துட்டானாம் என்றாள் மகள்.

மகனை அழைத்து ஏன் என்றேன்.

நான் ஒன்னும் செய்யல டாடி. அந்த அக்கா தான் தலையில கொட்டுனாங்க என்றான்.

சும்மா யாராவது கொட்டுவாங்களா? நீ ஏதவது செஞ்சிருப்ப என்றேன்.

அருகில் இருந்த மகள், "இவன் டிரான்ஸ்லேட் பண்ணிக் கொடுத்ததைக் கேட்டு கடுப்பாகித் தான் கொட்டியிருக்கு" என்றாள்.

எட்டாவது படிக்கிற அந்த அக்கா ஆறாவது படிக்கிற உனக்கி்ட்ட என்னத்த டிரான்ஸ்லேட் பண்ணச் சொன்னுச்சு.

ஒரு ப்ராவெர்பை (proverb) கொடுத்திருந்தாங்க. அதை அப்படியே ஆங்கிலத்துல டிரான்ஸ்லேட் பண்ணனும்னு இருந்துச்சு. உனக்கு ஆன்ஸர் தெரியுமா்ன்னு அந்த அக்கா கேட்டாங்க. அதுனால நான் சொன்னேன். கேட்டுட்டு தலையிலயே கொட்டிட்டாங்க.

அப்படி என்ன டிரான்ஸ்லேட் பண்ணி சொன்ன? என்றேன்.

"அடிமேல் அடி வைத்தால அம்மியும் நகரும்" அப்படின்னு இருந்துச்சு. அதுக்கு "LEG UP LEG KEEP MEANS MIXIE MOVE " ன்னு டிரான்ஸ்லேட்பண்ணிக் கொடுத்தேன். அதுக்கு கடுப்பாகி கொட்டிட்டாங்க

அதோடயாச்சும் விட்டுச்சேன்னு நினைச்சுக்க என்றேன்.

வேறு என்ன சொலறது...... 

No comments:

Post a Comment