Friday, 21 December 2018

மாற்றுச் சிந்தனை

"மற்ற எல்லா பேப்பர்லயும் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரைக்கும் ஹேண்ட் ரைட்டிங் ஒரே மாதிரியா இருககும். ஆனா, தமிழ் பேப்பர்ல அப்படி இருக்காது. மெயின் சீட்டுக்கு அப்புறம் இருக்குற சீட்டெல்லாம் எழுத்து கொச கொசன்னு இருக்கும்" என்றாள் மகள்.

ஏன்? எனறேன்.

கடைசி ஒன் ஹவர்னு மிஸ் சொன்னவுடனையே பதட்டமாயிடுது டாடி. வேக வேகமா எழுதுறதால எழுத்து நல்லாயில்லாமப் போயிடுது டாடி.

மகள் சொல்லிக் கொண்டிருந்ததை அருகில் இருந்த படி கேட்டுக் கொண்டிருந்த மகன், "நீ ஏன் ஒன் ஹவர்னு நினைக்கிற. சிக்ஸ்டி மினிட்ஸ் இருக்குனு நினைச்சுக்க. பதட்டம் இருக்காதுல" என்றான்.

கேட்டதும், "அட ஆமால" என்று தோன்றியது.

1 comment: